காஞ்சனா- 2 மாபெரும் வெற்றிக்கு பிறகு ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கி நடிக்க இருந்த படங்கள் மொட்ட சிவா கெட்ட சிவா, நாகா. இந்த இரு
படங்களையுமே வேந்தர் மூவீஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மொட்ட சிவா கெட்ட சிவா தலைப்பை சூப்பர் குட்
பிலிம்ஸ்க்கு கொடுத்துவிட்டார் லாரன்ஸ். இந்தப் படத்தையும் அவர்தான் இயக்கி நடிக்கிறார். எனவே அவர் இயக்கி நடிக்கவிருக்கும் அடுத்த
படத்திற்கு பைரவா என்று பெயர் சூட்டி இருக்கிறார். மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் முதல் பார்வை வடிவமைப்புகள் வருகிற பொங்கலன்று
வெளியிட இருக்கிறார்கள்.