காதல் புனிதமானது என்பார்கள். ஆனால் எத்தனை தடவை வேண்டுமானாலும் வாழ்க்கையில் வரலாம்.! வியப்பாக இல்லையா?
இதோ உதாரணமாக புதிய ஜோடி ஒன்று விரைவில் மணப்பந்தலை சந்திக்க இருக்கிறது.
சினிமா நடிகர் விஷ்ணு விஷால்விளையாட்டு வீராங்கனை ஜுவாலா கட்டா!
இருவருமே மணவிலக்கு பெற்றவர்கள்! தனித்து வாழ்ந்தார்கள்.விஷ்ணு விஷால் நடிகர் நட் ராஜின் மகள் ரஜினியை காதலித்துத்தான் மணம் செய்திருந்தார்.ஆனாலும் விதி விளையாடியிருக்கிறது.
விஷ்ணு விஷால் அண்மையில் தன்னுடைய மணவாழ்க்கை முறிவு பற்றி மிகவும் மனவருத்தமுடன் ஒரு பதிவு போட்டிருந்தார். தன்னை குடிப்பழக்கம் தொற்றிக்கொண்டு இன்னொரு தேவதாஸாக வாழ்ந்த வலியை பதிவு செய்திருந்தார்.அதிலிருந்து மீண்டதற்கு இன்னொரு காதலே துணையாக இருந்திருக்கிறது.
விளையாட்டு வீராங்கனை ஜ்வாலா கட்டாவுடனான நட்பு காதலாக மாறியது. தற்போது எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்பதை எல்லோருமே எதிர்பார்த்து இருந்தனர் இந்த நிலையில் இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக் கொடி காட்டி விட்டதாக சொல்லப்படுகிறது இதனால் இவர்களின் காதல் கல்யாணமாக விரைவில் மாறும் என நம்புகிறார்கள் எது நடந்தால் என்ன?
நல்லது நடந்தால் சரி.