தயாரிப்பாளர் தனஞ்செயனின் படம் கபடவேடதாரி. இந்த படத்தில் சிபிராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இன்னொரு வேடத்தில் நடிப்பதற்கு நடிகை பூஜா குமாரை ஒப்பந்தம் செய்திருந்தனர்.
அதில் திடீர் மாற்றம். நடிகை பூஜா குமார் அமெரிக்கா கிளம்பிவிடவே அவரது கேரக்டருக்கு வேறு ஒரு நடிகை அவசரத் தேவையாகி விட்டது. 90 களில் தமிழில் கேப்டன் விஜயகாந்துடன் நடித்திருந்த சுமா ரங்கநாத் என்கிற சுமன் ரங்கநாதனை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள்.
இந்த அவசர மாற்றம் பற்றி தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறுகையில் “எங்களின் அதிரடி தயாரிப்பான கபடவேடதாரி,கன்னட படத்தின் தழுவல்தான். இந்த தழுவலில் சுமன் ரங்கநாதன் நடித்திருந்தார். அவரே தமிழில் நடிப்பது எங்களுக்கு மகிழ்ச்சி. பிரமாண்டமான செட் அமைத்து ஒரு பாடல் காட்சியை அவரை வைத்து படமாக்கி இருக்கிறோம்”என்றார்.
மறைந்த மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனுடன் இணைந்து தனஞ்செயன் வசனங்களை எழுதி இருக்கிறார்.
திருமதி லலிதா தனஞ்செயன் தயாரிப்பு. சிபிராஜுக்கு இணை நந்திதா ஸ்வீதா ,ராசாமதி ஒளிப்பதிவு. சைமன் கிங் இசை.இறுதிக்கட்ட பணியில் இருக்கிறான் கபட வேடதாரி.