என்னதான் நட்பு தோளில் தொங்கினாலும் அடி பட்ட காயத்தின் தழும்பு உறுத்திக் கொண்டுதானே இருக்கும்.! அந்த உறுத்தல் என்றாவது ஒருநாள் பழி தீர்த்துக் கொள்ளும் என்பார்கள்.
அது ரஜினியின் வழியாக நடந்து விடும் போல் இருக்கு.!
ரஜினியின் செல்வாக்குக்கு ஆப்பு வைக்கும் வகையில் அவரது படம் ரிலீஸ் ஆகும் நாளன்று படப்பெட்டியை பா.ம.க.வினர் தூக்கிச்சென்றதை சூப்பர் ஸ்டார்தான் மறப்பாரா அல்லது அவரது ரசிகர்கள்தான் மறப்பார்களா?
இதோ வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது என்பதற்கு தமிழருவி மணியன் கட்டியம் கூறி இருக்கிறார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டுக்கு அளித்துள்ள பேட்டியில் ஒரு கருத்தை பதிவு செய்திருக்கிறார். ரஜினியின் ஸ்போக்ஸ்மேன் இவர்தான் என்பது மாதிரி தொடக்கத்தில் இருந்தே பேசி வருபவர்தான் தமிழருவி மணியன். மாநாடு நடத்தியவர்.
அவர் சொல்கிறார்.
“தினகரனின் கட்சியுடன் ரஜினி கூட்டணி அமைத்தால் ஓட்டுக்களை பாதிக்கும் என ரஜினி நினைக்கிறார். ஆகவே அந்த கட்சியுடன் கூட்டணி அமைகிற வாய்ப்பு இல்லை. ஆனால் ரஜினியின் கூட்டணியில் பா.ம.க இணையும் “என்பதாக சொல்லியிருக்கிறார்.
தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் அன்புமணி அமர வேண்டும் என்பது பா .ம.க நிறுவனர் டாக்டர் ராமதாசின் ஆசை. அடிக்கடி அதை பகிரங்கமாகவே சொல்லி வருகிறவர்
ஆனால் ரஜினியின் கூட்டணியில் சேர்ந்தால் அந்த ஆசை அம்போதானே!ரஜினி முதல்வர் ஆக வேண்டும் என்பது ரஜினியின் ரசிகர்களுடைய நெடுநாள் ஆசை. அதையேதான் பா.ஜ.க.வும் விரும்புகிறது.