டெல்லி சட்டசபையை எப்படியாவது ‘ஆம் ஆத்மி யிடம் இருந்து கைப்பற்றி விடவேண்டும் என பா.ஜ.க.மேலிடம் கடுமையான பிரசாரத்தில் இறங்கி வேலை செய்தது. பெரிய தலைகள் வேலை செய்தார்கள். தாமரையின் தலைமையிடத்தை தலைநகரில் வைத்துக் கொண்டு டில்லியை கோட்டை விடலாமா என தொண்டர்கள் தீயாக வேலை செய்தார்கள்.பா.ஜ.க.வின் குடியுரிமை திருத்த சட்டத்தை மையமாக வைத்து பிரசாரம் செய்தார்கள். ஆனால் மக்கள் அதை விரும்பவில்லை என்பது இந்த எக்சிட் போல் முடிவுகள் சொல்கின்றன. ஆனாலும் எண்ணிக்கை முடிவு பெற்றபிறகுதான் எதையும் தீர்மானிக்க இயலும் .
ஆம் ஆத்மியின் தலைவர் கெஜரிவால் மீது டெல்லி மக்கள் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது கருத்துக் கணிப்பில் வெளியாகி இருக்கிறது.
61.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
இந்தியா டுடே நடத்திய எக்சிட் வாக்குப்பதிவு கருத்துக்கணிப்பில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி 59 இடம் முதல் 68 இடங்கள் வரை இடங்களை பிடிக்கக்கூடும் என தெரிய வந்திருக்கிறது. பா.ஜ .க.வுக்கு 2 இடத்திலிருந்து 11 வரை இடங்கள் கிடைக்கக்கூடும் என கருத்துக் கணிப்பு தெரிவித்திருக்கிறது.
நாடு முழுவதும் இது எதிரொலிக்குமா என காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. ஆனாலும் காங்கிரசுக்கும் இது தோல்விதான்! அவர்களாலும் தலைநகரை கைப்பற்ற முடியவில்லையே.!