ஜெய் மற்றும் சுரபி நடிப்பில் மணிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘புகழ்’ அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. சமீபத்தில் வந்து பெரும் வெற்றி பெற்ற கமர்சியல் படங்களான வேதாளம் , பூலோகம் , ஆகிய படங்களின் வரிசையில் ‘புகழ் ‘ படமும் இடம் பிடிக்கும் எனக் கணிக்கப்படுகிறது.பிரபல திரைப்பட விநியோக நிறுவனமான அயங்கரன் இன்டர்நேஷனல் இந்தப் படத்தை வாங்கியதன் மூலம், படத்தின் தரத்தை பற்றிய எதிர்ப்பார்ப்பு உறுதியாகிறது.
‘அய்ங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தை வாங்கி இருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.சர்வதேச அளவில் திரை வர்த்தகத்தில் கொடிக்கட்டி பறக்கும் இந்த நிறுவனம் எங்கள் படத்தை வாங்கியதன் மூலம் நான் தயாரித்த ‘புகழ்’ படத்துக்கு அந்தஸ்து உயர்ந்து இருக்கிறது. வருண் மணியனின் ரேடியான்ஸ் மீடியா உடன் இணைந்து அயங்கரன் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிட உள்ளனர்.2016 ஆண்டின் துவக்கத்தில் ‘புகழ்’ வெளி வரும் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. என்னுடைய சீரிய முயற்சிக்கு உற்றத் துணையாக இருக்கும் ஊடக நண்பர்களுக்கு எங்களது குழுவின் சார்பில் புத்தாண்டு வாழ்த்துக்கள் ‘ என்கிறார் தயாரிப்பாளர் சுஷாந்த் பிரசாத்.