எப்போது தலைவர் கட்சியை தொடங்குவார் என்கிற கனவில் ஆண்டுக்கணக்கில் காத்துக் கொண்டிருக்கிறார்கள் ரஜினியின் ரசிகர்கள்.!
அவர்களது கனவு நனவாகும் நாள் செப்டம்பரில் வருகிறது என்பது அவர்களுக்கு இனிய செய்தி ஆகும்.!
நடக்குமா, அரசியலில் குதிப்பாரா, அதெல்லாம் சாத்தியமே இல்லேப்பா என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சரியான பதில் மதுரையில் கிடைக்கப்போகிறது என்று ரஜினியை சந்தித்து விட்டு வந்த ஒரு காந்தியவாதி கிசு கிசுத்திருக்கிறார்.
யார் அந்த காந்தியவாதி என்பது பிரச்னை இல்லை. அவர் சொன்ன தகவல் முக்கியமானது என்பதுதான் இங்கே கவனிக்கத் தகுந்தது.
“மதுரை திருச்சி ஆகிய இரண்டு மாநகரங்களில் ஒன்றில் கட்சியை தொடங்கப்போகிறார் தலைவர். செப்டம்பரில் அந்த மகிழ்ச்சியான நிகழ்வு நடக்கப்போகிறது. அதன்பின்னர் பரபரப்பான சுற்றுப்பயணம் நடக்கும். சுருக்கமாக சொல்வதானால் அமரர் எம்.ஜி.ஆர் எப்படி பரபரப்பு அரசியலை மேற்கொண்டாரோ அதே ஸ்டைலில் தலைவரின் பயணமும் அமையலாம்.
கட்சியின் பெயர் என்ன? நான்கு பெயர்கள் பரிசீலனையில் இருந்தன. அதில் ஒன்றை தேர்வு செய்திருப்பார். அதை அந்த தொடக்கவிழா மாநாட்டில்தான் அறிவிப்பார் என்று நினைக்கிறேன்.
தலைவரின் கட்சியுடன் 5 கட்சிகள் கூட்டணி சேரலாம். ஒரு பெரிய கட்சி உடைந்து ஒரு பிரிவினர் இங்கு வந்து சேர இருக்கிறார்கள். இசுலாமிய கட்சி ஒன்றும் இந்த அணியில் சேர விருக்கிறது.
இந்த தொடக்கவிழாவில் அமித்ஷா கலந்து கொள்வார் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது. இது இன்னமும் பரிசீலனையில்தான் இருக்கிறது.
பெண்கள் அமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது அவரின் கருத்து .அநேகமாக மகள் சவுந்தர்யா விசாகன் பொறுப்பேற்கலாம்.
எத்தனை இடங்களில் போட்டி?
160 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
முதலில் மதுரை திருச்சி ,கோவை மாவட்டங்களில் தலைவரின் பரபரப்பான சுற்றுப் பயணம் அமையவிருக்கிறது.ஆனால் இதில் மாற்றங்கள் இருக்கலாம்.
இன்னொரு முடிவையும் தலைவர் அறிவிக்க இருக்கிறார் .அது அவரது திரைப்படம் தொடர்பானது. நண்பர் கமல்ஹாசனின் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் திரைப்படம் தொடர்பானது .
ஆக தலைவரின் அரசியல் பயணம் செப்டம்பரில் தொடங்கி நான்கு மாதங்கள் பரபரப்பாக இருக்கும். ஆட்சி மாற்றம் கண்டிப்பாக நிகழும் “என்கிறார் அந்த காந்தியவாதி.