திமுகவில் இருந்த இளையவேள் ராதாரவியை நயன்தாராவின் கண்டனம் அதிமுகவுக்கு மடை மாற்றியது..
அங்கிருந்தவருக்கு என்ன பிரச்சனையோ நான்கே மாதத்தில் பாஜகவில் இணைந்து விட்டார்.
தேசிய நீரோட்டத்தில் இணைந்து இருக்கிறார்.
தீவிர திராவிட சுயமரியாதைக்காரர். ஆனாலும் பக்திமான். ஐயப்பனுக்கு விரதமிருந்து மலை ஏறியவர்.
தமிழ்நாட்டில் பாஜகவுக்கு சரியான பீரங்கி..! கூட்டத்தை கூட்டிவிடுவார். தற்போது அவரை வைத்துதான் சென்னையில் பாஜக கூட்டம் நடக்கிறது. வெற்று சேர்களை பார்த்து வந்த பாஜகவினர் ஆட்களை பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
நேற்றை கூட்டம் ஒன்றில் பேசினார் ராதாரவி.
“இதுநாள்வரை திராவிடத்தை சுவாசித்தவன் தற்போது தேசியத்தை சுவாசிக்க தொடங்கி இருக்கிறேன். தமிழகத்தை இனி ஆளப்போவது பாஜக தான்.! ரஜினிகாந்த் சரியான பாதையில் செல்ல ஆரம்பித்திருக்கிறார். அமித் ஷாவை சாதாரணமாக எடை போட்டு விடமுடியாது. அவர் 100 ஜெயலலிதாவுக்கு சமம்.200 கருணாநிதிக்கு சமம் .திமுகவுக்கு சிம்ம சொப்பனம்!” என்று பேசினார்.