பாலிவுட்டில் ரசிகர்களின் மகத்தான ஆதரவு ஷாருக் கானுக்கு இருக்கிறது..
அதை போல தமிழகத்தில் தளபதி விஜய்க்கு இருக்கிறது.
நெய்வேலியில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்று பத்து பேர் எதிர்ப்பு தெரிவித்ததும் கண்டனம் தெரிவித்து விஜய்யின் ரசிகர்கள் பல்லாயிரக்கணக்கில் கூடி விட்டார்கள்.
வேனில் ஏறி நின்று அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் .விஜய் செல்பி எடுத்து தனது டிவிட்டர் கணக்கில் பதிவிட்டார் .
விஜய் ,ஷாருக் இருவரது செல்பி படத்தையும் வெளியிட்டு சிலர் வைரலாக்கி வருகிறார்கள். “உன்பின்னால் ரசிகர்கள் இருக்கிறபோது யாரும் உன்னை அசைக்க முடியாது “என்கிறார்கள்.