இப்போதெல்லாம் படத்தின் புரமோஷன் வேலைகளுக்காக தயாரிப்பாளர்கள் பெரும்பாடு பட வேண்டியதிருக்கிறது.
எதையாவது புதுமையாக செய்தால்தான் அந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு ஈர்ப்பு வரும். இல்லாவிட்டால் பத்தோடு பதினைந்து என்று ரசிகர்கள் கடந்து விடுகிறார்கள்.
படத்தில் உள்ள முக்கியமான படங்களை வெளியிட வேண்டியதாக இருக்கிறது. பெய்டு டிவிட்டர் ஆட்களை வைத்து செய்து வந்த பூஸ்ட் அப் வேலைகள் எல்லாம் வேஸ்ட் என்பதை நடிகர்களும் உணர ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதாக தமிழில் வருகிற ஒரு தின இதழ் கருத்து வெளியிட்டிருக்கிறது.
அதே என்னவோ ஆகிப் போகட்டும்.
ஆந்திராவில் பூரி ஜெகநாத் என்றால் திரை உலகில் தவிர்க்க முடியாத பெரிய ஆள்..
இவரது மகன் ஆகாஷ் பூரி கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார். காதல் ரசம் பொங்குகிற ஒரு புதிய படம் விரைவில் வெளிவர இருக்கிறது. அந்த படத்துக்கான புரமோஷன்களில் வித்தியாசமான படங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துகிறார்கள். அந்த வரிசையில் ஓடுகிற பஸ்ஸில் கதாநாயகி கேத்திகா ஷர்மாவை கதாநாயகன் ஆகாஷ் பூரி முத்தமிடுகிற ஒரு படத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.
தூள் கிளப்புறாங்க !