சூர்யா நடித்துள்ள சூரரை போற்று படத்தின் புரமோஷன் வேலைகளில் 2 டி தயாரிப்பு நிறுவனம் வித்தியாசமான முறைகளில் படத்தைப் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.
நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியாகிய கற்பூர சுந்தரபாண்டியன் அதற்கான வேலைகளில் ஈடு பட்டிருக்கிறார்.
சூரரை போற்று படத்தில் நெடுமாறன் ராஜாங்கம் என்கிற பெயரில் விமான பைலட்டாக நடித்திருக்கிறார்.
Ithu vera level massss🔥🔥#VeyyonSilliSingleFromFeb13 #SooraraiPottruMania #SooraraiPottruSpiceJet #SooraraiPottru pic.twitter.com/IeVsNlZIEk
— Pasla Theatre (@paslatheatre) February 11, 2020
இவரது ஜோடி அபர்ணா பாலமுரளி , மற்றும் ஜாக்கி ஷெராப் ,மோகன்பாபு ,கருணாஸ் ,இன்னும் பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ்தான் இசை. இன்று இவர் வெளியிட்டுள்ள போஸ்டரில் பிப் 13 ஆம் தேதி நடுவானில் ஸ்பைஸ் ஜெட் ரக விமானத்தில் வெய்யோன் பாடல் வெளியாகிறது என்கிற தகவலை தந்திருக்கிறார்.