“வா..மோதி பார்த்திடுவோம் “என்கிற மனநிலையில்தான் ‘மாஸ்டர் ‘படக்குழுவினர் இருக்கிறார்கள் போலும்.!
சிகரெட் பிடிக்க தடை ,மது குடிக்க கட்டுப்பாடு என்று சட்டங்கள் சொன்னாலும் ஓப்பன் பார்கள் நாடெங்கும் நடக்கவே செய்கின்றன. ஓரம் சாரங்களில் ஒதுக்குப் புறங்களில் உட்கார்ந்து சாவகாசமாக சரக்கு அடிப்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.
ஆனால் திரைப்பட போஸ்டர்களில் கதாநாயகன் கையில் சிகரெட் வைத்திருந்தால் அல்லது மது பாட்டில் வைத்திருந்தால் பொங்கிவிடுவார்கள் சில தலைவர்கள்.
அந்த தலைவர்கள் சொல்லாத அறிவுரைகளா?
மக்கள் கேட்டிருந்தால் எத்தனையோ எம்.எல்.ஏக்களை பார்த்திருக்கலாம்.!
ஆனால் போஸ்டரில் அத்தகைய கெட்ட சமாசாரங்களை பதிவு செய்வது தவறு.அது நல்லதல்ல .தவிர்க்கப்படவேண்டும்.
ஆனால் ஒருவனை சீண்டிக்கொண்டே இருந்தால் அந்த மனுஷனுக்கு ஆத்திரம் வருமா வராதா?
தளபதி விஜய்யை தேவையில்லாமல் சீண்டினார்கள். அதன் விளைவு ரசிகர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது.
படக்குழுவினரும் விஜய் கையில் ஒரு புட்டியை கொடுத்து ஹெட் போன் வழியாக பாட்டைக் கேட்க வைத்திருக்கிறார்கள். கையில் இருப்பது என்ன ரக புட்டி என்பது தெரியாது. ‘ஒரு குட்டி கதை ‘என்ன சொல்லப்போகிறதோ?
ஆக இன்னொரு சிக்கல் வரப்போகிறது ?