பிரபல பின்னணி பாடகர் எஸ் பி,பாலசுப்ரமணியத்துக்கு பூர்வீக வீடு நெல்லூரில் இருக்கிறது. திருப்பரசுவாரி வீதியில் இருக்கிற அந்த வீட்டை தற்போது காஞ்சி மடத்துக்கு தானமாக வழங்கி இருக்கிறார்.
இசைஞானி இளையராஜாவின் சகோதரர்களுடன் இசைக்குழுவை நடத்தி பின்னர் இசைஞானியைப்போலவே பிரபலமானவர் பாலு..
16 மொழிகளில் 40 ஆயிரம் பாடல்கள் பாடியிருக்கிற இவர் சென்னைக்கு குடி பெயர்ந்தும் அவரது அப்பா எஸ்.பி.சாம்ப மூர்த்தி வாழ்ந்த பரம்பரை வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு வந்து விட்டார். அந்த வீட்டை காஞ்சி மடத்துக்கு தானமாக வழங்குவதாக சில ஆண்டுகளுக்கு முன் அறிவித்திருந்தார்.அந்த வீட்டைபெரிய விலைகொடுத்து வாங்குவதற்கு எத்தனையோ வாய்ப்புகள் வந்தன.
ஆனாலும் சொன்ன சொல்லை காப்பாற்றும் விதமாக தற்போது அந்த வீட்டை காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதியிடம் சட்டப்படி தானமாக வழங்கி விட்டார்.
“எங்கப்பா சாம்ப மூர்த்தி சைவத்தை பின்பற்றியவர். அவர் இப்போது உயிருடன் இல்லை. இந்த வீட்டை சம்ஸ்கிருத பள்ளிக்கூடம் நடத்துவதற்காக தானம் கொடுத்துவிட்டேன். அவரது பெயரில் இந்த பள்ளிக்கூடம் நடக்கும் .இதன் வழியாக அவர் வாழ்கிறார்” என்று கூறி இருக்கிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம் .