அப்பா அந்தக் காலத்து பாகிஸ்தான் ஆர்மியில் இருந்தவர் என்பதற்காக அவரது மகனை இந்த காலத்தில் ஆடை கலைந்து அசிங்கப்படுத்தலாமா?
அட்னன் சமி. இந்திப்படங்களில் பின்னணி பாடகராக இருப்பவர். இசை அமைப்பாளரும் ஆவார்.அப்பா பாக்.ஆர்மியில் இருந்தவர். தற்போது இல்லை. அட்னன் சமி இந்திய குடிமகன். பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கிறார்.
தன்னிடம் அரசியல் கேள்விகள் கேட்கப்படுவதை இவர் விரும்புவதில்லை.
“நான் ஒரு இசை அமைப்பாளன் .எனக்கு என்ன அரசியல் தெரியும் என்று என்னிடம் கேட்கிறீர்கள்? அரசியல்வாதியிடம் ராகங்களை பற்றி பேச முடியுமா? அதைப்போலத்தான் நானும்! எனக்கு அரசியல் தெரியாது.
நமக்கு கண்களை முதுகு பக்கமாக வைக்காமல் முன்பக்கமாக கடவுள் வைத்ததற்கு காரணமே முன்னாடி இருப்பதை பார்க்கவே.!முன்னேறி செல்லவேண்டும் என்பதே எனது கருத்து.”என்கிறார் அட்னன் சமி.