இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிப்பதற்கு முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டுவதற்கு முக்கிய காரணம் அவரது படங்கள் பிரமாண்டங்களின் தளமாக அமைவதுதான்.
கேலியாக சொல்வார்கள் ” மலைக்கும் ஷங்கர் பெயிண்ட் அடிப்பார்” என்பதாக.!
ஆனால் ஷங்கரின் சிந்தனைகள் வித்தியாசமாக இருக்கும் என்பதுதான் உண்மை..
அரசியல் அவலங்களை சுட்டிக்காட்டுவதில் கதையுடன் இயைந்த துணிவு இருக்கும். ஒருநாள் முதல்வர் எத்தனை அரசியல் தலைவர்களை நோகடித்திருந்தது ,அதனை அந்த தலைவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதெல்லாம் திரைக்குப் பின்னால் நிகழ்ந்தவையாகும்.
ஆனாலும் ஷங்கர் இந்தியன் 2 எடுக்கிறார் என்றால் அவரது மன வலிமைதான் காரணம்.
அகில இந்திய அளவில் அரசியலை ‘அலசுகிற’படமாக இருக்கும். இந்திய அரசியலில் நடந்த உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு அந்த கதை அமைந்திருக்கிறது என்கிறார்கள்.
சொந்த பாதுகாப்பு படையை சேர்ந்த மெய்க்காப்பாளனால் காலையில் சுட்டுக் கொல்லப் பட்ட அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை மாலையில் தான் வெளியிட்டதாக ஒரு தகவல் உண்டு. இத்தகைய தகவல்தான் ஒரு படைப்பாளிக்கு உந்து சக்தியாக அமைந்து ஒரு நல்ல கதையை கொடுக்க வைக்கிறது.அந்த வகையான படைப்பாளிகள் மிகவும் அரிதானவர்கள்.
அவர்களில் ஒருவர் ஷங்கர்.
இவரது இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கப்போகிறார் என்பது ஒரு சேதி.
இது உண்மையா ?
“நான் அவரை வைத்து இயக்கலாம்.விஜய் எனது இயக்கத்தில் நடிக்கலாம்.அது எப்போதும் நடக்கலாம்.!” இதுதான் ஷங்கரின் பதிலாக இருக்கிறது.
ஜாடை காட்டி விட்டார் ஷங்கர். அதை சாத்தியமாக்கும் பொறுப்பு யாருக்கோ?