இசைப்புயல் ஏஆர் .ரகுமான் அமைதியானவர்.ஐந்து வேலை தொழுகின்ற இசுலாமியர். இந்தியர்.
ஒரு பழுத்த இந்து ஆன்மீகவாதிக்கு எத்தகைய மத உணர்வு இருக்குமோ அத்தகைய உணர்வு ரகுமானுக்கு இருந்தால் அது தவறில்லையே!
இந்தியா மதசார்பற்ற நாடு என்பதை இன்றைய காலகட்டத்தில் அழுத்திச் சொல்ல வேண்டியதாக இருக்கிறது.
தஸ்லிமா நஜ்ரீன் .முற்போக்கு பெண்ணியவாதி. எழுத்தாளர்.இந்திய அரசியல் வட்டத்தில் அடிக்கடி பேசப்படுகிறவர்.
இவரது டிவிட்டர் பதிவு தற்போது விவாதத்துக்கு உரியதாகி இருக்கிறது.
இசைப்புயல் ஏ ஆர்.ரகுமானின் மகள் கதீஜா பர்கா அணிந்த படத்தை வெளியிட்டு ” நான் ரகுமானின் இசைக்கு பரம ரசிகை. ஆனாலும் அவரது மகள் கதீஜா பர்கா அணிந்திருப்பதை பார்க்கிறபோது எனக்கு மூச்சு முட்டுவது போல சிரமமாக இருக்கிறது”என்பதாக பதிவு செய்திருக்கிறார்.
இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் இருக்கிறது. ஆனால் ரகுமானின் குடும்ப படத்தைப் பார்க்கிறபோது பர்கா என்பது அண்மைக்கால பழக்கமாகவே தெரிகிறது.