என்றோ முடிந்து விட்ட பர்கா விவகாரம்.
ஏஆர் .ரகுமானின் மகள் கதீஜா மும்பையில் பர்தா அணிந்து வந்து பாடியதை பலர் விமர்சித்தார்கள்.
யாருடைய வம்புக்கும் போகாமல் தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்று வாழ்ந்து வருகிறவர் ரகுமான்.
அவரை அன்றே சர்ச்சைக்குள் இழுத்து விட சில அமைப்புகள் முயன்றன. ஆனால் அவர் அதை அமைதியாக கடந்து விட்டார் அந்த புன்னகை மன்னன்.
இந்த நிலையில்தான் சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான தஜ்லிமா நஜரீன் டிவிட்டரில் ஒரு பதிவை போட்டார் மகராசி.
அதில் “ரகுமானின் இசை தனக்கு மிகவும் பிடிக்கும்.ஆனால் அவரின் மகள் கதீஜாவை பர்தாவில் பார்க்கிறபோது மூச்சு முட்டுகிறது” என்பதாக சொல்லியிருந்தார்.
இந்தியா மத சார்பற்ற நாடு என்பது சிலருக்கு வசதியாக மறந்து விடுகிறது.
நஜரீனின் பதிவை பார்த்த கதீஜாவுக்கு அளவான கோபம் வந்துவிட்டது.
“என்னய்யா அளவுகோல் வைத்து அளந்து பார்த்தியா” என்று கேட்காதீர்கள்.
வார்த்தைகளின் வீரியத்தை வைத்து சொல்லிவிடமுடியும்.
விசுவாமித்திரரின் கோபம் எப்படி இருக்கும் என்பதை படித்துத்தான் தெரிந்து கொண்டிருக்கிறோம்.
கதீஜா ஒரு சமூக ஆர்வலர்.ரகுமானின் டிரஸ்டி காப்பாளர் ,இசை அமைப்பாளர் ,பாடகி என பன்முகம் கொண்டவர்.
இவர் நஜரீனுக்கு அவரது இன்ஸ்டராகிராமில் பதில் அளித்திருக்கிறார்.
“ஓராண்டு கடந்து மீண்டும் பர்தாவை பற்றிய பேச்சு சுற்றிவர ஆரம்பித்திருக்கிறது.இந்த நாட்டில் எவ்வளவோ நடக்கிறது.ஆனால் ஒரு பெண் அணியும் துண்டு துணியைப் பற்றி பேசுவது பார்த்து திடுக்கிட்டுப் போயிருக்கிறேன்.
அது ஒவ்வொருதடவையும் எனக்குள் தீயை உருவாக்குகிறது.
கடந்து விட்ட ஆண்டுகளில் பலவிதமான குணம் கொண்டவர்களை பார்த்து விட்டேன்.
எனது வாழ்க்கையில் நான் எடுக்கும் முடிவுகள் குறித்து பலவீனப்படவோ ,கவலைப்படவோ இல்லை.நான் என்ன செய்கிறேன் என்பது மகிழ்ச்சியே.
என்னை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி “என்பதாக பதிவிட்டிருக்கிறார்.