எழுத்து இயக்கம் ; பிரியா கிருஷ்ணசாமி ,இசை :வெட் நாயர் ,ஒளிப்பதிவு :ஜெயந்த் சேது மாதவன் .
ஆர்.ராஜு ,சுகுமார் சண்முகம் ,சு பா.முத்துக்குமார் ,ஜெயலடசுமி ,ஸ்டெல்லா கோபி ,சமராஜா ,பிரேம்நாத் ,நடராஜ் ,நந்தினி .
*************
காலம் காலமாக கிராமங்களில் இருந்துவருகிற தலைக்கூத்தல் என்கிற மூத்தோர் கொலை நிகழ்வு 2010 -ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் கண்டறியப்பட்டது.
சாகவும் முடியாமல் பிழைக்கவும் இயலாமல் படுத்த படுக்கையில் பாரமாக கிடக்கிற முதியவர்களை உறவினர்களே கொன்று விடுவார்கள். அதிகாலையில் குளிர குளிர எண்ணெய்க்குளியல்,அதன் பின்னர் நிறைய இளநீர் கொடுத்தால் கிட்னி கெட்டு விடும்.குளிர் ஜுரம் வந்து விடும்.எப்படியும் இரண்டொரு நாளில் சிவலோக பிராப்தி அல்லது வைகுண்ட பிராப்திஅந்த முதியவருக்கு கிடைத்து விடும்.இந்த மாபாதகச்செயலுக்கு வீட்டாரே உடன்பட்டு இருப்பதுதான் கொடூரம்.
இந்த மாபாதகச்செயலை மையமாக வைத்து கே.டி என்கிற கருப்புத்துரை என்கிற படம் முன்னரே வெளியாகி இருக்கிறது.மு.ராமசாமி நடித்திருந்தார்.
தற்போது தலைக்கூத்தலை மையமாக வைத்து மற்றோரு படம் “பாரம்’ வெளியாகி இருக்கிறது.
இதை எழுதி இயக்கியிருப்பவர் பிரியா கிருஷ்ணசாமி.
நடித்திருப்பவர்கள் மேக்கப் வாசம் அறிந்திராதவர்கள். அதனால்தானோ என்னவோ இயல்புடன் இருக்கிறது.
கருப்பசாமியாக நடித்திருக்கிற ஆர்.ராஜு, வீராவாக வருகிற சுகுமார் சண்முகம் ,மற்றும் மூதாட்டியாக நடித்திருப்பவர் அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்.
தடதடக்கிற பின்னணி இசை ,கடகடவென பாடப்படுகிற பாடல்,ஆடல் என எந்த வித கடத்துகிற நிகழ்வும் இல்லாமல் பாரம் சிறப்புடன் இருக்கிறது.
எவ்வித ஓசையும் இல்லாமல் பார்வையாளர்களை கவர்ந்த படம் மக்களையும் கவருமா?
பரிசுக்குரிய இந்த பாரம் மக்களின் ரசனைக்குரியதாக இருக்குமா?