கஞ்சா போன்ற போதை பொருட்களைப் பயன்படுத்துவதால் பள்ளி குழந்தைகளும், இளைஞர்களும் எந்தளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இப்படத்தில் கூறியிருக்கிறோம். இப்படத்தின் கதையை பல முன்னணி நாயகர்களிடம் கூறினோம். ஆனால், ரிஷி மட்டும் தான் ஒப்புக்கொண்டார்’ என்றார்.இசையமைப்பாளர் கார்த்திக் குரு பேசும்போது, “இசைத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு தான் சினிமா துறைக்கே வந்தேன். ஆனால், போதிய வாய்ப்பு கிடைக்காததால், இசையை விட்டு வேறு துறைக்கு செல்லலாம் என்ற முடிவில் இருந்தேன். எம்.டி.விஜய் மற்றும் எம்.டி.ஆனந்த் இருவரும் மீண்டும் இசை துறைக்கு அழைத்து வந்து விட்டார்கள். இப்படத்தில் எம்.டி.விஜயும் எம்.டி.ஆனந்தும் முழு சுதந்திரம் கொடுத்து ஒத்துழைப்பு கொடுத்தார்கள். ஆகையால் தான் என்னால் சிறப்பாக இசையமைக்க முடிந்தது” என்றார். இப்படத்தில் ஒரு பாடலை இசையமைப்பாளர் தேவா பாடி இருக்கிறார்..
தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது,”மம்முட்டி போல் அனைவரும் அவரவர் செலவில் கேரவன் வைத்துக்கொள்ள வேண்டும். தயாரிப்பாளருக்கு வரும் வருமானத்தில் 10% வரி கட்ட வேண்டும். விநியோகஸ்தர்களும் 10% வரி கட்ட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், மாநில அரசு வைத்திருக்கும் 8% வரியை நீக்க சொல்லி கோரிக்கை வைக்கவிருக்கிறோம். மத்திய அரசு சினிமா துறையை நசுக்குகிறது. இது தொடர்ந்தால், நாங்கள் போராட்டத்தில் இறங்குவோம்.”என்றார்
இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் தயாரிப்பாளர் ராஜனுக்கு பதிலளித்துப் பேசினார்
“வரி கட்டுவதற்காக போராட்டம் செய்ய வேண்டிய அவசியமில்லை. முறையான விளக்கத்தோடு அரசாங்கத்தை அணுகினாலே போதுமானது “என்றார்
இயக்குநர் மிஷ்கின் ,பாக்யராஜ் ஆர்.கே.செல்வமணி ,சாய் தீனா ,ஜாகுவார் தங்கம் ,ஆகியோரும் பேசினார்கள்.
இயக்குநர் எம்.டி.ஆனந்த் பேசும்போது, “இது எனக்கு முதல் மேடை. அதுவும் பெரிய மேடை. நான் இங்கு நிற்பதற்கு காரணம் என் அம்மா. அதிக அளவு போதை ஒரு மனிதனின் வாழ்வை எப்படி பாதிக்கிறது என்பதை தான் இப்படத்தில் கூறியிருக்கிறேன். மேலும், தணிக்கைக் குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் குடுத்திருக்கிறார்கள். ஆனால், இது விழிப்புணர்வு படம் மட்டுமே.”என்றார்.
விழாவின் கடைசியில் , ‘மரிஜுவானா’ படத்தின் இசை தகடு வெளியிடப்பட்டது