தன்னை புகழ்ந்து பாடச்சொல்லி அந்த போலியான மகிழ்ச்சியில் மயக்கம் கொள்பவர் அல்லர் சிவகார்த்திகேயன். வித்தியாசமான மனிதர்களில் ஒருவர்.
அவரது டாக்டர் படத்தின் முதல் தோற்றம் அண்மையில் வெளியாகியது.
. சிவகார்த்திகேயன், அனிருத் ஹிட் கூட்டணியில் இயக்குநர் நெல்சனின் வெற்றி ராசியும் டாக்டர் படத்துக்கு கூடுதல் பலம்.
சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் மகிழ்ச்சியின் எல்லைக்கு போய் விட்டார்கள்.
படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டி வி பெரும் விலைக்கு கைப்பற்றி இருக்கிறது. அவர்கள் எதையும் கணக்குப்போட்டு காயை நகர்த்துகிறவர்கள். வெற்றி உறுதியானால்தான் முதலீடு செய்வார்கள்!
2020 ஆம் வருடத்தின் மத்தியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள, இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு, கோவாவில் நடைபெற்று வருகிறது.
. சிவகார்த்திகேயனின் வித்தியாசமான லுக்குடன், படத்தில் அவரது கதாப்பாத்திரம் குறித்து பெரும் மர்மம் நிலவும் நிலையில், ஃபர்ஸ்ட் லுக்கில் சிவகார்த்திகேயனை சுற்றி இருக்கும் ‘மெடிகல் சர்ஜிகல் கத்திகள்’ படத்தின் கதை என்னாவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது.
இப்படத்தில் தென்னிந்திய சினிமாக்களில் சமீபத்திய பரபரப்பான நடிகை பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க, காமெடியில் கலக்கி வரும் யோகிபாபு, சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கிறார். வினய் வில்லனாக நடிக்கிறார்.
கே.ஜெ.ஆர் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்கிறார். கோலமாவு கோகிலா புகழ் நெல்சன் இப்படத்தினை இயக்குகிறார்