“அண்ணே ,இன்னிக்கி புதன் கிழமை .பொன் கிடைச்சாலும் புதன் கிடைக்காதுன்னு ஊர் பெரிசுக சொல்லும். அதனால மாநாட்டு பந்தக்காலை இன்னிக்கி வெச்சிடலாம். அப்புறமா பிரசார வேலைகளை ஆரம்பிச்சிடலாம்”னு நினைத்திருப்பார்கள் போலிருக்கிறது.
கலைப்புலி தாணு,இயக்குநர் இமயம் பாரதிராஜா ,சேரன் ,அம்மா கிரியேஷன் சிவா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ள நல்ல நேரத்தில் கோவிலில் பூஜை நடத்திவிட்டு வேலைகளை ஆரம்பித்திருக்கிறார்கள் ,மாநாடு குழுவினர்.
கூட்டணிக்கு கூப்பிட்டால் நானும் தயார் என்பது போல நாம் தமிழர் சீமானும் வந்து கலந்து கொண்டிருக்கிறார்.
கல்யாணி பிரியதர்சன் பேசியதற்கு சிம்பு காட்டிய ரீ-ஆக்சனை ஒரே ஷாட்டில் ஓகே செய்தார் இயக்குநர் வெங்கட் பிரபு.இதுதான் இன்றைய முதல் ஷாட் .
சீமானும் சிம்புவும் ஊர்ப்பட்ட அரசியலை பேசியிருப்பார்கள் போலிருக்கிறது. ஏறத்தாழ அரை மணி நேரம் அவர்கள் இருவர் மட்டுமே பேசிக்கொண்டிருந்தனர்.
காலை எட்டுமணிக்கு நடிகர் சங்கம் இருக்கிற இடத்துக்கு பக்கத்தில் இருந்த ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விட்டார் சிம்பு.
பூஜை,முடிந்து முதல் ஷாட் எடுத்து முடிந்ததும் அவரது கேரவானுக்குள் சென்று விட்டார்.
இன்றைக்குத்தான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு முகமெல்லாம் ரோஜாப்பூக்கள் !