வலிமை படப்பிடிப்பில் ‘தல’ அஜித் பைக் ஓட்டியபோது விழுந்து விபத்துக்குள்ளானார் என்பது பரவி வந்த செய்தி.
இந்த செய்தி அவரது ரசிகர்களின் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
போனிகபூர் தயாரிக்கிற இந்த படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார்.
அஜித்குமாருக்கு இந்த படத்தில் இரட்டை வேடம் என்கிறார்கள்.போலீஸ் அதிகாரியாக ஒரு வேடத்தில் நடிக்கிறார்.
அஜித் படம் என்றால் ஸ்டண்ட் காட்சிகளுக்கு குறைவு இருக்காது.
அப்படிதான் அன்றும் விபத்து நடந்திருக்கிறது.
டைமிங் என்பது ஸ்டண்ட் காட்சிகளில் மிகவும் கவனமுடன் பின்பற்றவேண்டியதாகும். வினாடி தவறினாலும் விபரீதங்களுக்கு உள்ளாக வேண்டும். அன்று வீலிங் செய்கிறபோது டைமிங் சற்று தவறியதால் தல அஜித் பலமாக விழுந்து விட்டார்.
நல்ல வேளை !உள்காயம் எதுவும் இல்லை. வெளியில் மட்டும் பலத்தகாயம். டாக்டர்கள் வந்து முதல் சிகிச்சை செய்திருக்கிறார்கள்
இருந்தாலும் அன்றைய செடியூலை முடித்து விட்டுதான் வீட்டுக்குப் போயிருக்கிறார் அஜித்குமார்.