சென்னை பூந்தமல்லியை அடுத்த நஸரத் பேட்டையில் உள்ள ஈ விபி படப்பிடிப்பு அரங்கில் லைகாவின் தயாரிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் – 2 படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று சண்டை காட்சி படமாக்கப்பட்டது.இதில் கமல்ஹாசன் வெளிநாட்டு கலைஞர்களுடன் சண்டையிடும் காட்சிகள் படமாக்கப்பட்டது.
அப்போது (அதிக சக்தி வாய்ந்த விளக்கு வெளிச்சத்திற்காகக் கட்டப்பட்ட ராட்சத கிரேன் ஒன்று எதிர்பாராத விதத்தில் அறுந்து விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே மது, புரடக்சன் அசிஸ்டன்ட்,(வயது 29) சந்திரன் (வயது 60),கிருஷ்ணா(வயது3 4) உதவி இயக்குனர் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இயக்குநர் ஷங்கருக்கும் காயம்.கமல்ஹாசன் உயிர் தப்பினார்.
இதையடுத்து உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது .இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச் சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.