நேற்று இரவு லைகா வின் தயாரிப்பான இந்தியன் 2 படப்பிடிப்பில் பயங்கர விபத்து நடந்தது. கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் அந்த இடத்திலேயே துடிதுடித்து மாண்டு போனார்கள்.
இயக்குநர் சங்கருக்கும் காலில் காயம்.ஆனால் உலகநாயகன் கமல்ஹாசன் தப்பியது ஆண்டவன் அருள் என்பதாக சொல்கிறார்கள்.இந்த கோரா விபத்தில் பிரபல கார்ட்டூனிஸ்ட் ,திரைப்பட விமர்சகர் மதனின் மருமகனும் பலியாகிவிட்டார். ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த ஸ்ரீ கிருஷ்ணா (வயது 34 ) காதலித்து அமிதாவின் கரம் பற்றியிருந்தார்.
இந்த விபத்து தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
தயாரிப்பு நிறுவனமான லைகா தனது கவலையை தெரிவித்திருக்கிறது,
“எங்களது வலியை எப்படி சொல்வது என்பது தெரியாமல் கவலையில் ஆழ்ந்திருக்கிறோம். கடினமாக உழைக்கிற மூன்று நிபுணர்களை இழந்திருக்கிறோம்.அவர்களின் இழப்பு ஈடு செய்ய இயலாது.அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஆன்மா அமைதியடையட்டும் “