கடந்த 19-ம் தேதி இந்தியன்- 2 படப்பிடிப்பு ஈவிபி பிலிம் சிட்டியில் நடந்தது.அன்று இரவு நடந்த சண்டைக்காட்சி படப்பிடிப்பில் திடீரென கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் உதவிஇயக்குனர் உள்பட 3 பேர்உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர்.
இதனையடுத்து நசரத்பேட்டை போலீசார் தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டர் ராஜனை கைது செய்தனர்.மேலும்இது தொடர்பாக 4 பேர் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டது .
இதையடுத்து இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசன் ஆகியோருக்கும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவ்விபத்து தொடர்பாக நசரத்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இவ் வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.