
அன்றைய பரபரப்புக்காக சிலர் மேடையில் பேசுகிறபோது சில வாக்குறுதிகளை அள்ளி விட்டு விடுவார்கள்.ஆனால் நடப்பதில்லை.மிஷ்கின் அப்படிப்பட்ட மேடைப்பேச்சு புலியாக இருப்பாரோ?
இப்படியும் சிலர் அன்று அவர் பேசியபோது சந்தேகப்பட்டார்கள். பாரம் படத்தின் முன்னோட்ட காட்சியில் அவர் பேசியபோது “குறைந்தது பத்து ஊர்களில் என் சொந்த காசில் போஸ்டர் அடித்து ஓட்டுவேன்” என்று சொன்னார்
எத்தனை ஊர்களில் ஒட்டினார் என்பது தெரியவில்லை.
ஆனால் அவரது பிஆர் ஓ அனுப்பிய செய்தியில் சுவரொட்டி ஒட்டுவதை போன்ற படம் இணைக்கப்பட்டிருக்கிறது.
மிஷ்கின் பற்றி பாரம் படத்தின் இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி மகிழ்ச்சியுடன் தனது கருத்துகளை பதிவு செய்திருக்கிறார்.
“மிஷ்கின் காட்டி வருகிற அன்புக்கு விலை மதிப்பு இல்லை. அவர் இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவர்.மிக உயரத்தில் இருக்கிற அவர் புதுமுகங்களான எங்கள் மீது காட்டுகிற அன்புக்கு ஈடு எதுவுமில்லை.”என்பதாக சொல்லியிருக்கிறார்.