பாலிவுட்டின் பிரச்னைக்குரிய நடிகைகளில் கங்கனா ரனாவத்தும் ஒருவர்.
எவராவது சீண்டினால் தகுந்த பதிலடி இவர் கொடுப்பார்.அல்லது இவரது தங்கை கொடுப்பார். இயக்குநர் ஏ எல் விஜய் இயக்கத்தில் தலைவியில் தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
மீ டூ விவகாரத்தில் சிலரை காய்ச்சி எடுத்தவர் கங்கனா.
புனித ஸ்தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாத சுவாமி சிவன் கோவிலுக்கு அதிகாலையில் சென்று தீர்த்தமாடி தரிசனம் செய்தார். பின்னர் பிரகாரம் சுற்றி வந்தார். இவ்வளவு கலை நயமுள்ள தொன்மையான ஆலயங்கள் வட இந்தியாவில் கிடையாது. பிரமிப்புடன் கோவிலை சுற்றி வந்த கங்கனா அப்படியே இந்தியாவின் பெருமை மிகு குடியரசுத்தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல்கலாம் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினார்.