இந்து முறைப்படி தளபதி விஜய்-சங்கீதா திருமணம் சென்னையில் நடந்தது என்பது நாடறிந்த மங்கல நிகழ்வு.
அதை சிலர் அரசியலாக்க முயன்று வருகிறார்கள்.
“கிறித்தவ முறைப்படிதான் விஜய்யின் கல்யாணம் நடந்தது” என்று பா.ஜ.க.பிரமுகர்களே சொல்வதுதான் வேடிக்கை.
விஜய்யின் அப்பா இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கடுப்பாகி இருக்கிறார் என்பதை அண்மையில் அவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அறிந்து கொள்ள முடிந்தது.
“நான் ஒரு கிறித்துவன் ,எல்லோருக்குமே தெரியும். என்னுடைய மனைவி ஷோபா இந்து. எங்களுக்கு கல்யாணம் ஆகி 45 வருஷங்கள் ஆகி விட்டது. மனைவியின் மத நம்பிக்கையில் நான் தலையிடுவதில்லை. எங்கள் வீட்டில் பெரிய பூஜை அறை இருக்கிறது.
நான் ஜெருசலேம் போய் இருக்கிறேன்,ஒரு முறை.
ஆனால் திருப்பதிக்கு மூன்று தடவை சென்றிருக்கிறேன். அங்கு திருமுடி காணிக்கையும் செய்திருக்கிறேன். மொட்டை போட்டிருக்கிறேன் என்பதை அழுத்தமாக சொல்ல விரும்புகிறேன்.
விஜய் இந்து பெண் சங்கீதாவை கல்யாணம் செய்து கொண்டிருக்கிறார்.
அவர் கிறித்துவ முறைப்படி கல்யாணம் செய்து கொண்டதாக சொல்கிறவர்கள் நிரூபிக்க முடியுமா?
நிரூபித்தால் பகிரங்க மன்னிப்பு கேட்கவும் தயார்” என சவால் விட்டிருக்கிறார் .