தமிழ் ,தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் அனுஷ்கா.
இவர் நடித்திருந்த பாகுபலி சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாகும்.
இந்த படத்தின் ஹீரோ பிரபாஷுடன் அனுஷ்காவுக்கு காதல் என்கிற தகவலை பாகுபலி படம் வலுவாக்கியது..இருவருமே மணமாகாதவர்கள் என்பதுடன் பல நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் சேர்ந்தே வந்தது பட உலகில் கிசுகிசுக்களுக்கு நெய் ஊற்றியது போலாகியது.
இருவருமே காதல் செய்திகளை மறுத்து வந்தாலும் அதை ரசிகர்கள் நம்பவில்லை.
இப்போது அனுஷ்கா தனது வலியை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
“என்னுடைய பெற்றோர் பார்க்கிற மாப்பிள்ளையைத்தான் கல்யாணம் செய்து கொள்ளப்போகிறேன்.
நான் யாரையும் காதலிக்கவில்லை.!
எனது சொந்த வாழ்க்கையைப் பற்றி அடிக்கடி வருகிற வதந்திகள் உண்மை அல்ல. அந்த வதந்திகளால் நான் மிகவும் காயப்பட்டிருக்கிறேன். வேதனையாக இருக்கிறது”என பதிவு செய்திருக்கிறார் அனுஷ்கா .