மாநாடு ஷூட்டிங் தொடங்கிய பிறகு சிம்புவின் போக்கில் நல்ல மாற்றம் தெரிகிறது. ரசிகர்களை சந்திப்பதிலும் ,கல்லூரி அளவில் தனக்கு ஆதரவு திரட்டுவதும் அவருக்கு கை கொடுத்திருக்கிறது. குறிப்பாக மாணவிகள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்திருக்கிறது.
இதற்கு அவரது மாற்றம்தான் காரணம்.
நயன்தாரா,ஹன்சிகா ஆகிய நடிகைகளுடனான காதலும் முறிவும் சிம்புவின் மீது தப்பான எண்ணங்களை உருவாக்கி இருந்தன.
முறிவுக்கும் , முகச்சுழிப்புக்கும் ஆண் காரணமா,பெண் காரணமா என்கிற உண்மை தெரியாமல் அத்தகைய எண்ணம் ஏற்பட்டிருந்தது.
இன்று வரை உண்மையான காரணம் தெரியவில்லை.
அவர்களும் சொல்லவில்லை .இது நாகரீகம்.
இன்று புதிய இளைஞனாக சிம்பு மாறி இருக்கிறார்.
அண்மையில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
“பெண்களை திட்டிப் பாடுறீங்கன்னு சொல்றீங்க. ஆனா எனக்குத் துணையா நிக்கிறது பெண்கள்தான்.அவங்க மீது நான் மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறேன்.
அவங்களுக்கு ஒரு பிரச்னைன்னா நான்தான் முதல் ஆளா நிற்பேன் “என்று பேசியதும் மிகப்பெரிய கைதட்டல் கிடைத்தது.