காதல் காட்சிகளில் நடிக்கும்போது அதிக அளவில் டேக் போகும்.
அது நாயகனின் விருப்பமா,அல்லது நாயகியின் ஆசையா என்பது தெரியாது.
சில நடிகர்கள் முன்னதாகவே டைரக்டர்களிடம் சொல்லிவிடுவார்கள் ‘ஏழு டேக்காவது போகட்டுமே!”
இது இந்திய திரை உலகில் மட்டுமல்ல ஹாலிவுட்டிலும் நிகழ்வதுதான். ஒரு லிப்லாக் சீன எடுக்க 12 டேக் வரை போன கதை எல்லாம் இருக்கிறது.
சரி அதைப்பற்றி நாம் ஏன் கவலைப்படவேண்டும்?
காதல் காட்சிகள் பற்றி ரவுடி பேபி சாய் பல்லவி என்ன சொல்கிறார்.?
“ரொமான்ஸ் சீன்களில் நடிப்பது அவ்வளவு சிரமமா? தெரியலீங்க. கதையும் அந்த காட்சியும் ஒருங்கிணைந்திருந்தால் நடிகருக்கும் நடிகைக்கும் நடிப்பதற்கு சிரமம் இருக்காது. காட்சியும் கதையும் முரண்பட்டிருந்தால் விளங்காது.நான் அத்தகைய படங்களை தவிர்த்திருக்கிறேன்.” என்கிறார்.
அந்த படங்கள் எவையென சொன்னால் நல்லா இருக்குமே சாய்