பாலிவுட்டின் பளிங்குச் சிலை பிபாஷா பாசு.
மாடலாக இருந்து நடிப்பதற்கு வந்தவர் .தமிழ்,தெலுங்கு இந்தி என பல படங்களில் நடித்திருப்பவர்.பரிசுகளும் பதக்கங்களும் அள்ளியவர்.
கரண் சிங் குரோவர் என்கிற மாடலை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.இந்த கரண்சிங் முன்னதாக ஷ்ரத்தா நிகாம் ,ஜெனிபர் என இரு மனைவிகளுடன் வாழ்ந்து மணமுறிவு பெற்றவர்.
காதலுக்கு யார் தான் விதி விலக்கு ?
விசுவாமித்திரரே மேனகையின் வனப்பில் மயங்கி கூடிக் கலந்தவர்தானே !
பிபாஷாவும் குரோவரும் தேனிலவை கடந்து விட்டாலும் நாளும் மன்மதலீலைதான்.! முயங்கி மயங்குவர். அண்மையில் பூலோக சொர்க்கமான மாலத் தீவுக்கு சென்றிருந்தார்கள். அங்கு இளந்தம்பதியர் எப்படி தங்களை மறப்பார்களோ அப்படி இருந்திருக்கிறார்கள்.
ஆரத்தழுவலென்ன ,அமுத முத்தங்களென்ன..கொண்டாடி விட்டார்கள். ஆனால் அவைகளையெல்லாம் படங்களாக தனது இன்ஸ்ட்ராகிராமில் பதிவு செய்திருக்கிறார் பிபாஷா .பலே படங்களை நீங்களும் பாருங்கள்.!