எருமைச்சாணி விஜயகுமார் என்றால் நல்லாவா இருக்கு?
ஆனால் அந்த ஆடை மொழியைத்தான் தனக்கு புகழைத் தந்தது எனச் சொல்லி அடை மொழியாக போட்டுக் கொள்கிறார் விஜயகுமார். இவரது எருமைச்சாணி குறும்படம் சிறப்பாக இருந்து இவரது திரை உலக நுழைவுக்கு காரணமாக இருந்தது என்பதால் அந்த சாணி விடவில்லை.
ஒருவேளை எருமைச்சாணிக்குப் பதிலாக பசு சாணி என்கிற பெயரில் குறும்படம் எடுத்திருந்தால் அகில இந்திய அளவில் பெயர் வாங்கி இருக்கலாம். அது கோ மாதா ஆச்சே!
சரி அது எப்படியோ இருந்து விட்டு போகட்டும் சின்ன வேடங்களில் படங்களில் தலையைக் காட்டி வந்த எ .சா.புகழ் விஜயகுமார் ராஜேந்திரன் இயக்குநர் ஆகி இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் அரவிந்த்சிங் தனது எம்.என்.எம் பிலிம்ஸ் சார்பில் அருள்நிதியை வைத்து எடுக்கும் படத்துக்கு விஜய்குமார்தான் இயக்குநர்.
அரவிந்த்சிங் என்ன சொல்கிறார்.?
“கல்லூரி பேக் டிராப். உண்மையாக நடந்த சம்பவங்கள்.உயிர்த்துடிப்பாக இருந்தது.சரி இதை நாமே தயாரிக்கலாம் என்று முடிவு எடுத்து முதலில் அருள்நிதியிடம்தான் போனோம்.அவர் வித்தியாசமான கதைகளுக்கு முதலிடம் கொடுப்பவர்.கதையைக் கேட்டு சம்மதம் சொல்லிவிட்டார்.அவருடன் 5படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்த அனுபவம் எனக்கு இருக்கிறது.”என்கிறார் .
நடிகர் அருள்நிதி சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சௌத்திரி தயாரிப்பில் நடிகர் ஜீவாவுடன் இணைந்து நடித்துள்ள “களத்தில் சந்திப்போம்” படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது.. தயாரிப்பாளர் கதிரேசனின் 5ஸ்டார் நிறுவனத்தில் புதுமுக இயக்குநர் இன்னாசி இயக்கத்தில் நடித்துள்ள பெயரிடப்படாத புதிய படம் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் மற்ற நடிக நடிகையர் தேர்வு நடந்து வருகிறது.