ஒரு புதுப்படம்; எல்லோரும் இளைஞர்கள்.
பெரியவர் சிறியவர் பார்த்துத் தமிழ் வினைப்படுவதில்லை.
எந்தச் சிப்பியில் எந்த முத்தோ? பெரும்படம் போலவே இந்தச் சிறுபடத்திற்கும் ஒரு காதல் பாடல். கவிப்பேரரசு வைரமுத்து எழுதியது.
இசை – மாரிசக்தி, இயக்கம் – மகிமைதாஸ், பாடகர்கள் – யது – ஜாஹ்நவி , படம் – ஒராங்குட்டான்.
பாடல்
நண்பா!
எப்போது காதல் வாய்த்தது?
அப்போது என்ன நேர்ந்தது?
ஒரு சூறாவளி
இதயச் சிறுகூட்டில் சுழன்றதா?
ஒரு கோதாவிரி
முதுகின் நடுக்கோட்டில் நகர்ந்ததா?
இலவம்பஞ்சு போலே
உடல் மிதந்து போகாதோ
உன்னை நினைத்தால்
வார்த்தை மொழியிழந்து போகும்
சொல் தீர்ந்து போனாலும்
உரையாடல் தீராது
கண்ணா! வினோத வேதனை
கண்தூங்கும் போதும்
காதல் சிந்தனை