இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து சம்பவ இடத்திலேயே மூவர் பலியாகி விட்டனர். ஷங்கரின் உதவி இயக்குநர் கிருஷ்ணா ,செட் அசிஸ்டென்ட் சந்திரன் ,தயாரிப்பு உதவியாளர் மது ஆகிய மூவரும் பலியானவர்கள் .
விபத்து நடந்தபோது சில அடி தூரத்தில் இருந்த இயக்குநர் ஷங்கர் ,உலக நாயகன் கமல்ஹாசன் ,நடிகை காஜல் அகர்வால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கிறார்கள்.
இது தொடர்பாக லைகா நிறுவனம் ,கிரேன் இயக்குபவர், தயாரிப்பு நிர்வாகிகள் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.
இதற்கிடையில் லைகாவுக்கு கமல்ஹாசன் கடிதம் எழுதியிருந்தார் .அந்த கான்பிடன்ஸ் கடிதத்தை லைகா ரகசியமாக வைக்காமல் சில ஊடகங்களுக்கு கசிய விட்டதாக சொல்கிறார்கள்.. அது செய்தியாகி விட்டது. அந்த வருத்தத்தில் கமல்ஹாசன் இருந்து வருகிறார்.
இந்த நிலையில்தான் லைகாவின் முதன்மை தயாரிப்பு நிர்வாகி சுந்தரராஜ் சென்னை உயர்நீதி மன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருக்கிறார்.