ராதா ரவி கலந்து கொள்கிற எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அவர் சார்ந்த அரசியல் கட்சியைப் பற்றிய பிரசாரம் நேரடியாகவோ ,மறைமுகமாக இருக்கும்.
சிவகாமி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு அதிமுகவை சேர்ந்த ஜெ.எம்.பஷீர் வந்திருந்தார். துணை முதல்வர் ஓபிஎஸ் வருவதாக சொல்லியிருந்தார்கள். அவர் வேறு பல நிகழ்ச்சிகளுக்கு சென்று விட்டதால் அவர் வரவில்லை.
ராதாரவி அன்று கலந்து கொண்டது சிவகாமி படத்தின் இசை வெளியீட்டு விழா.
தெலுங்கில் வெற்றி பெற்ற நானி தெலுங்கு படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்திருப்பதாக சொன்னார்கள். ஆனால் கன்னடப் படத்தின் மொழி மாற்றம் என்பதை என் மறைத்தார்கள் என்பதுதான் தெரியவில்லை.கன்னட நானியில்தான் சுகாசினி மணிரத்னம் நடித்திருந்தார்..விழாவை தொகுத்து வழங்கியவரும் தெலுங்குப்படம் என்பதாகவே சொல்லி வந்தார்.
எதனால் இந்த குழப்பம் என்பது புரியவில்லை.
சிவகாமி படம் ஆவிகள் பேய்களை அடக்கி ஆளுகிற அம்மன் படமாக இருக்கும் என்பது முன்னோட்டத்தைப் பார்த்தபோது தெரிந்தது.
நடிகர் தயாரிப்பாளர் ஜே.எம்.பஷீர், இளையவேள் ராதாரவி, பவர் ஸ்டார் சீனிவாசன், எம்.டி.சினிமாஸ் ஏ.எம்.சௌத்ரி, உட்பட விருந்தினர்கள் பலர் கலந்து கொண்திருந்தார்கள்.
திகார் வரை விசிட் பண்ணியிருக்கிற பவர் ஸ்டார் வழக்கம் போல காமடியாகவே பேசினார்.
“நான் நடிப்பதற்கு முன் ராதாரவியிடம் தான் கேட்பேன்.திட்டி விடுவார். சரி நாம நடிக்க வர்றதுனால பொறாமையால் திட்டுறார்னு நெனச்சேன். ஆனா நான் சினிமாவில் 40 கோடி இழந்திருக்கேன்.அப்பதான் புரிந்தது அவர் என் திட்டுறார் என்பது. நான் எல்லாத்திலும் ஜெயிப்பேன்என்கிற நம்பிக்கை இருக்கு.
இந்த விழாவிலே ரஜினி சாருக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். சீக்கிரமா கட்சியை ஆரம்பிச்சு என்னை துணை முதல்வராக்கிடுங்க. இல்லேன்னா நான் கட்சி ஆரம்பிக்கிறேன் .வந்து சேருங்க,” என்றார்.
இந்த பேச்சு எவ்வளவு அபத்தம் என்பது தெரிந்தாலும் கைதட்டலை அள்ளியது .அது நக்கலாகவுமிருக்கலாம்.
நடிகர் ராதாரவி பேசுகையில் “நான் வாழ்கிற காலத்தில் சி ஏ ஏ வை ஆதரித்துதான் பேசுவேன்.. இந்த “சிவகாமி” படம் சமூகத்திற்கு தேவையான படம். பெண் பாதுகாப்பு தற்போதைய காலகட்டத்தில் அவசியமான தேவையாக இருக்கிறது. சி ஏ.ஏ வை எதிர்க்க சொல்லி கையெழுத்து வாங்குவதற்கு பதில் இப்படத்தை பார்க்க சொல்லி கையெழுத்து வாங்கலாம்”என்று திமுக தலைவர் ஸ்டாலினை பெயர் சொல்லாமல் வாரினார்.