சிலம்பரசன் ,எஸ்டிஆர் நடத்துகிற மாநாடு ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடக்கும் என்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் அதில் திடீர் மாற்றம்.
சென்னையில்தான் மாநாட்டின் பெரும்பாலான நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கிறது என்பது எஸ்.டி .ஆர் ரசிகர்களுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.
வி.ஜி.பி.யில்தான் மாநாடு நடக்கிறது.
சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா ,தளபதி விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி ,எஸ்.ஜெ.சூர்யா ,கல்யாணி பிரியதர்ஷன் ,பிரேம்ஜி அமரன் ஆகிய முக்கிய நடிகர்கள் இருக்கிறார்கள். நாயகன் நாயகி இயக்குனர் என எல்லோருமே சென்னையில் இருப்பதால் இங்கேயே படத்தை எடுத்தால் பலவகையில் செலவு மீதமாகும் என எஸ்.டி.ஆர் கணக்குப்போட்டு தயாரிப்பாளரிடம் சொன்னதாக தெரிகிறது.வெங்கட் பிரபு இயக்கும் இந்தப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை.
இதுவும் நல்ல மாற்றம்தான்!