பொதுவாக பிரஸ் ஷோ வுக்கு அரை மணிக்கு முன்பாக பத்திரிகையாளர்களிடம் படத்தின் ஹீரோவும் ஹீரோயினும் பேசுவதில்லை.
காலேஜ் குமார் படத்தின் பத்திரிகையாளர்களுக்கான தனித்த ஷோவில் இளைய திலகம் பிரபு ,மதுபாலா , சிறப்பு அழைப்பாளி அம்பிகா ஆகியோர் பேசினார்கள்.
காலேஜ் குமார் படத்தை சந்தைப்படுத்தல் மற்றும் விநியோக உரிமையை யூ எ ஃ ஓ டிஜிட்டல் சினிமா பெற்றிருக்கிறது.இந்த நிறுவனத்துக்கு இந்தியா முழுமையாக 24 அலுவலகங்கள் இருக்கின்றன.இவர்கள் வழியாக பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் திரைப்படங்களை விநியோகம் செய்வதற்கு முன் வந்திருக்கின்றன.
காலேஜ் குமார் பட விநியோக உரிமையை ‘யூ எ ஃ ஓ டிஜிட்டல் சினிமாஸ் ‘பெற்று இருக்கிறது.
அவர்கள் ஏற்பாடு செய்ததுதான் அந்த பிரஸ் ஷோ.
இந்த நிகழ்வில் இளையதிலகம் பிரபு பேசுகையில் “மனிதனை மனிதனாகப் பாருங்கள். சினிமாவை சினிமாவாகப் பாருங்கள். பெங்களூருவில் தமிழ்ப்படத்தை எல்லோரும் விரும்பிப் பார்க்கிறார்கள்.இந்த படத்தில் ஜோடியாக மதுபாலா நடித்திருக்கிறார். பாஞ்சாலங்குறிச்சி படத்துப் பிறகு எனக்கு இணையாக நடித்திருக்கிறார். அருமையாக தமிழ்ப் பேசுகிறார். மும்பையில் வாழ்ந்தாலும் அவர் நம்ம தமிழ்ப் பொண்ணு .ஏறத்தாழ உலகில் உள்ள முக்கிய மொழிகள் எல்லாம் மதுவுக்குத் தெரிகிறது ” என்று பாராட்டினார்.
மதுபாலா தனக்கிருக்கும் நம்பிக்கையைப் பற்றி சொன்னார்.
“முதலாவதாக இயக்குகிறவருடைய படத்தில் நான் நடித்தால் அந்தப்படம் வெற்றி பெரும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.”என்று சொன்னவர் பிரபு வீட்டின் நெய்,தயிர் சிறப்புகளையும் விளக்கி சொன்னார்.
பொதுவாக நடிகர் திலகம் வீட்டுச் சாப்பாட்டில் மட்டன் சிக்கன் பிஷ் வகையறாக்கள்தான் விதம் விதமாக இருக்கும் .ஆனால் மதுபாலாவோ “நெய் தயிர்”சிறப்பு பற்றி சொல்கிறாரே என்பது ஆச்சரியமாக இருந்தது.