ஒரு தடவை ரணமானாலும் அதனது தழும்பு ஆயுட்காலம் வரை இருக்கும் என்பார்கள்.
உண்மையான காதலின் தோல்வியும் அப்படித்தான் இருக்கும்.!
காதலில் தோல்வி அடைந்த மஜ்னுன் ,காதலி லைலாவின் சமாதி அருகில் மாதக்கணக்கில் உறங்கிய நிலையில் இருந்தான் என்பார்கள். காதலனை தவிர்த்து தன் மீது கணவனின் கை கூட படாமல் தற்காத்து வந்தாள் லைலா என்பார் நிஜாமி.
அத்தகைய காதல் தற்போது அரிதாகிவிட்டது.
பாலிவுட் நடிகை நீனா குப்தா.
இவர் மேற்கிந்திய கிரிக்கெட் அணி வீரர் விவியன் ரிச்சர்டை காதலித்தார்,
முன்னரே மணமாகி இருந்த விவியனும் நேசித்தார்.இவர்களின் காதல் 1980 -ல் நிகழ்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டார்கள்.
பலன் பெண் குழந்தை மஜாபா கிடைத்தாள் .!
விவியனுக்கு இந்தியாவிலும் மகள் கிடைத்தாள் .ஆனால் இந்திய மனைவி கிடைக்கவில்லை.!
அதனுடைய அனுபவமோ ,அல்லது அடி வாங்கியதன் விளைவோ என்னவோ அடுத்தவர்க்கு புத்தி சொல்ல ஆரம்பித்திருக்கிறார் நீனா. 2008-ல் ஒரு சாட்டர்டு அக்கவுண்ட்டை நீனா கல்யாணம் செய்து கொண்டிருக்கிறார்.விவேக் மெஹ்ரா என்பது பெயர்.
நீனா சொல்வது என்ன?
“கல்யாணம் ஆன ஆண்களை காதலிக்காதீர்கள்.!
மனைவியை விரும்பவில்லை என்பான். அவளுடன் நீடித்த வாழ்க்கை வாழ முடியாது என விசும்புவான்.நீயும் நம்புவாய். காதலிப்பாய் .அவன் கல்யாணம் ஆனவன் என்பது தெரிந்தும் அவனுக்கு உன்னையே கொடுத்து விடுவாய்.
அவளை பிரிந்து வந்து விட வேண்டியதுதானே என கேட்டால் குழந்தைகளை காரணமாக காட்டி இயலாது என்பான்.
உன்னால் அவனை விட முடியாது.அவனும் உன்னை விடமாட்டான்.
ரகசியமாக விடுமுறை நாட்களை அவனுடன் அனுபவிக்கும் ஆசை வந்து விடும்.
முடிவாக அவனது மனைவியை டைவர்ஸ் பண்ணும்படி வற்புறுத்த அவனோ அது அவ்வளவு ஈஸி இல்லை .அவளுக்கு சொத்து இருக்கிறது ,பாங்கியில் பணம் இருக்கிறது என்று சொல்லி தட்டிக்கழித்து விடுவான் .இதனால் உன்னுடைய வாழ்க்கைதான் கசந்து போகும் “ என்று அறிவுரை சொல்லி இருக்கிறார் நீனா குப்தா .