எழுத்தாளர், இயக்குநர் ராஜு முருகனின் படம் ஜிப்ஸி .
குக்கூ ,ஜோக்கர் படங்களை இயக்கியவர்தான் இந்த ராஜு முருகன் .
நடிகர் ஜீவாவை வைத்து ஜிப்ஸி என்கிற படத்தை இயக்கினார். இவரது படத்தில் சமுதாயத்தில் நிகழ்கிற அராஜகங்களை சுட்டிக்காட்டுவது வழக்கம். குற்றங்களை சுட்டினாலே சில அரசியல்வாதிகளுக்கு அடி வயிறில் அமிலம் சுரந்து விடும். அத்தகையவர் களுக்கு அதிகார பலம் அமைந்துவிடுமானேயானால் ஒரு ஆட்டு ஆட்டுவார்கள்.
அப்படி ஒரு தடையைத்தான் இந்த ஜிப்ஸிக்கு போட்டுப்பார்த்தார்கள்.
இந்தியாவில் தணிக்கைக்குழு என்பது எடுப்பார் கைப்பிள்ளை.யார் ஆட்சி அதிகாரத்தில் அமர்கிறார்களோ அவர்களை சார்ந்தவர்களை குழுவின் உறுப்பினர்களாக்கி விடுவார்கள்.
சாலை வழியாக பயணிக்கிற ஜிப்ஸிகளின் காதலை சொல்கிற இந்த படத்தை சென்னை ,மும்பை என கடத்தி சான்றிதழ் கொடுக்க மறுத்தார்கள்.
எப்படியோ,எந்த சாமி புண்ணியமோ இந்த ராஜு முருகனுக்கு அந்த செந்தூர் முருகன் கருணை கிடைத்து ரிலீஸ் ஆகப்போகிறது.
இந்த படத்தை திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு போட்டுக் காட்டியிருக்கிறார்கள். அவர் துரை .முருகன் சகிதமாக படத்தை பார்த்திருக்கிறார். பாராட்டியும் இருக்கிறார்