சாதிய வன்மம் கலந்துதான் தற்போதைய திரைப்படங்கள் தியேட்டருக்கு வருகின்றன. “கொடுத்த காசுக்கு நிம்மதியாக படத்தைப் பார்த்தோம் ,படத்தில் வந்த கத்தி நம்மை குத்தாமல் விட்டதே சந்தோசம்” என்கிற மனநிலையில்தான் படங்களை பார்க்க வேண்டியதாக இருக்கிறது.
ஆனால் இயக்குநர் கண்ணன் அத்தகைய ஜோதியில் கலந்து விடாமல் கதை பண்ணி இயக்கி இருக்கிறார் .அந்த படத்தின் பெயர் ‘பிஸ்கோத்’
சந்தானம் ஹீரோ என்பதால் கண்டிப்பாக காமடிக்கு பஞ்சம் இருக்காது. கொடுத்த காசுக்கு கழுத்து அறுபடாம தப்பிச்சோம் என்கிற நிம்மதி நிச்சயம் இருக்கும்.
கண்ணனின் இயக்கத்தில் ‘ஜெயம் கொண்டான் ”கண்டேன் காதலை ‘ஆகிய படங்களில் சந்தானம் நடித்திருந்தாலும் இந்த ‘பிஸ்கோத்’தில்தான் நாயகன் .
பிஸ்கட் கம்பெனியில் வேலை பார்க்கிற கேரக்டரை மையமாக வைத்து கதை பண்ணியிருக்கிறார். இந்த படத்தில் இன்னொரு சிறப்பு அம்சம் சவுகார் ஜானகிதான் சந்தானத்தின் பாட்டி. அவருக்கு 400 வது படம்.!
ஒரு வேடத்திலேயே வெரைட்டியாக நடிக்கிற சந்தானத்துக்கு 3 வேடம். அதில் ஒன்று கமல் மாதிரி.சகலகலாவல்லவன் காஸ்ட்யூம். ஒரு பைட் இருக்கிறது.
“நேத்து ராத்திரி யம்மா “ஸ்டைலில் பாட்டும் இருந்தால் தியேட்டரில் தீபாவளி கொண்டாடிவிடலாம். ஐதராபாத்தில் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் உள்ளதுபோல் அரண்மனை தளம் அமைத்து படப்பிடிப்பு நடந்திருக்கிறது.
படத்துக்கு இசை ரதன் .ரகுமானின் உதவியாளராக இருந்தவர் .அர்ஜுன் ரெட்டிக்கு இசை சேர்த்தவர்.தாரா அலிஷா பெர்ரி, மற்றும் சுவாதி முப்பாலா இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள்.,விரைவில் எதிர்பார்க்கலாம்