மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.,ஆயிரம் ஜென்மங்கள், பாஸ்கர் ஒரு ராஸ்கல் உள்ளிட்ட பல தமிழ்ப்படங்களில் நடித்தவர் நிகிஷா படேல்.
தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.தென்னிந்திய மொழிகளில் மட்டும் 25 படங்கள் வரை நடித்திருக்கிறார். திடீரென லண்டனுக்கு பறந்து விட்டார்.
“நான் எங்கிருந்து வந்தேனோ அந்த இடத்துக்கே போய் விட்டேன். இந்திப்படங்களில் நடிப்பதற்காகவே நான் கிளம்பி வந்தேன்.ஆனால் தென்னிந்திய மொழிப்படங்களை மதிக்கத் தெரிந்த பாலிவுட் காரர்கள் நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை.
வாய்ப்புகளுக்காக என்னை மாற்றிக்கொண்டு அனுசரித்துப்போனேன். கடந்த ஓராண்டாக வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இதனால் ஒரு இன்டர்நேஷனல் ஏஜென்சியுடன் இணைந்து பிரிட்டிஷ் பிலிம், டி .வி.நிகழ்ச்சிகளில் பங்கேற்கப்போகிறேன். லண்டனில் வீடும் வாங்கிவிட்டேன். என்னுடைய வசிய சக்தியை தமிழ்ச்சினிமாவில் இழந்து விட்டேன்” என்கிறார் நிகிஷா படேல்.