சிக்கன் மட்டன் எந்த பிரியாணியாக இருந்தாலும் தொட்டுக்கொள்ள அடிஷனலாக தயிர் வெங்காயம் இருந்தாக வேண்டும். இதைப்போல எவ்வளவு பெரிய நடிகர் நடித்தாலும் அந்த படத்துக்கு ஒரு கவர்ச்சி அயிட்டம் அல்லது அதிரடி பைட் வேண்டும். இல்லாவிட்டால் அது ஒரு குறையாக பேசப்படும்.அட்லீஸ்ட் கான்டர்வர்சியாக சீன் இருக்க வேண்டும்.
பல கண்டங்களை கடந்து வந்திருக்கிறார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன். நிலுவையில் ஏதேனும் பஞ்சாயத்து இருக்கிறதா என்பது தெரியவில்லை. அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கம் படத்தில் நாயகனாக அதர்வா முரளி நடிக்க இருக்கிறார்.
நாயகியாக யாரை நடிக்கவைக்கலாம் என்று பல நாள் யோசனை ,ஆலோசனைக்கு பிறகு பைனல் லிஸ்ட்டில் லாவண்யா திரிபாதியை சேர்த்து இருக்கிறார்கள்.
“கவர்ச்சி ,அழகு ,சிறந்த நடிப்பு ,கதை முழுமையும் கேரக்டரை சுமந்து செல்லக்கூடிய ஆற்றல் உள்ள நடிகையைத்தான் பல நாட்கள் தேடினோம். பல நடிகைகளை எங்கள் படத்தின் கேரக்டருடன் இணைத்துப் பார்த்ததில் யாரும் பொருந்தவில்லை.கடைசியில் லாவண்யா திரிபாதிதான் பொருத்தமாக இருந்தார். ஒப்பந்தம் செய்து விட்டோம் “என்கிறார் இயக்குநர் ரவீந்திர மாதவா.
இவர் பூபதி பாண்டியன் ,சுசீந்திரன் ஆகியோருடன் பணியாற்றிய அனுபவசாலி.
சக்தி சரவணன் ஒளிப்பதிவு . படத்தொகுப்பு கலை ,ஸ்டண்ட் சரவணன் .மற்ற நட்சத்திர தேர்வு நடந்து கொண்டு இருக்கிறது.