இனமான பேராசிரியர் என அழைக்கப்பட்ட திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் பேராசிரியர் க.அன்பழகன் இன்று அதிகாலை மறைந்து விட்டார்.
கொள்கைப் பற்றுள்ளவர். திராவிட முன்னேற்றக்கழகத்தின் பெருமைக்குரியவர்,தமிழர் நலனுக்காக பாடுபட்டவர்.கட்சியில் பிளவு ஏற்பட்டபோது “கலைஞருடன்தான் இருப்பேன் “என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் செல்ல மறுத்தவர்.கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்தவர்.
கலைஞரின் மூத்த சகோதரராக இருந்து திமுகவை வழி நடத்தியவர்.
அவரது மறைவு தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு பேரிழப்பு . அவரது பேரிழப்பு தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம்.