மகளிர் தினம் நாளை அனுசரிக்கப்பட இருக்கிறது.
நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கின்ற பாலியல் வன்முறைகள் சற்றும் குறைந்த பாடாக இல்லை. சிறுமிகளும் சின்னாபின்னப்படுகிறார்கள்.
இந்த நிலையில் தனது மகளிர் தின மன நிலையை நடிகை மதுமிதா இப்படி வெளிப்படுத்தியிருக்கிறார் டிவிட்டர் வழியாக.!
“பெண் தன் தனிப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கிறாள். அவளுக்கான சுதந்திரத்தை யாரும் அனுமதிக்க அவசியமில்லை. சரியோ தவறோ அவளே கடந்து போவாள். உங்கள் சுட்டிக்காட்டல் அறிவுப் பூர்வமாக இருக்கட்டும். விமர்சிக்கிறேன் என காயப்படுத்தினால் ஏறி மிதித்துக் கடந்து போவேன். இனிய மகளிர் தின வாழ்த்துகள்”என சொல்லியிருக்கிறார் .இதுவும் சரிதானே!