மரைக்காயர் ..அரபிக்கடலில் சிங்கம்.
இது சரித்திரம் சார்ந்த படம். போர்த்துக்கீசியரின் கடல் வழி படையெடுப்பினை தடுப்பதற்காக முதன் முதலாக கடற்படையை அமைத்தவர் மரைக்காயர். கோழிக்கோடுவை கைப்பற்ற வேண்டும் என்கிற நோக்குடன் அரபிக்கடலில் படை கொண்டு வந்தவர்கள்.போர்த்துக்கீசியர்கள்.
இதை மய்யமாக வைத்து இயக்குநர் பிரியதர்சன் சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இணைந்து பிரமாண்டமாக படத்தை எடுத்திருக்கிறார். கேரளசினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட் படம் என்றால் இதுதான் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்.’
இந்த படத்தின் தமிழக விநியோக உரிமையை கலைப்புலி எஸ்.தாணு வாங்கி இருக்கிறார். இதற்கு முன்னர் மோகன்லால்,பிரியதர்சன் ,பிரபு இணைந்திருந்த சிறைச்சாலை படத்தின் விநியோக உரிமையை தாணுதான் வாங்கி இருந்தார்.
இந்த படத்தின் டிரெய்லரை பார்க்கும்படி இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு கோரிக்கை விட்டிருந்தார்.
முன்னோட்டத்தைப் பார்த்து விட்டு பச்சனும் புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்.
“எனது நண்பர் மோகன்லால். மிகவும் மதிக்கத்தக்கவர் ,அவர் மரைக்காயர் அரபிக்கடலில் சிங்கம் படத்தின் முன்னோட்டத்தை பார்க்க சொன்னார். பார்த்தேன், அவர் மீதான மதிப்பும் மரியாதையும் மேலும் கூடி விட்டது” என்பதாக அமிதாப் பாராட்டி இருக்கிறார்.
இந்த படத்துக்காக ஹைதராபாத் ராமோஜிராவ் திரைப்பட நகரத்தில் மிகப்பெரிய கப்பலை உருவாக்கி இருந்தார்கள். மிகப்பிரிய ஏரியும் உருவாக்கப்பட்டது.
இந்த படத்தில் மோகன்லால் தவிர்த்து பிரபு அர்ஜுன் ,சுனீல்ஷெட்டி ,பிரணவ் மோகன்லால் ,கீர்த்தி சுரேஷ் கல்யாணி பிரியதர்ஷன் ,அர்ஜுன் ,சுகாசினி மணிரத்னம் ,இயக்குநர் பாசில் ,சித்திக் ,நெடுமுடி வேணு ,முகேஷ் மேலு பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
5 மொழிகளில் தயாராகிய இந்த பாதாம் 5000 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.