சூரரைப் போற்று…சூர்யா நடித்து வரவிருக்கிற படம். சுதா கொங்காரா இயக்கியிருக்கிற இந்த படத்தில் மோகன்பாபு ,அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இசை ஜி.வி.பிரகாஷ்குமார். அண்மையில் வெளியான ‘மண்ணுருண்ட ‘பாடல் தெக்கித்திய கிராமிய மெட்டில் பாடப்பட்டிருக்கிறது. செந்தில் பாடியிருக்கிறார். பாடலை ஏகாதசி எழுதியிருக்கிறார்.
வரிகளில் வலி அதிகம்.
என்னங்கடா மனுஷ பொழப்பு..இதுக்குப்போயி இப்படி அடிச்சிக்கலாமா என நெற்றிப் பொட்டில் அடிக்கிற வரிகளில் ஜிவி பிரகாஷின் கிராமிய மணம் பொங்குகிறது.
“கீழ் சாதி உடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா …அந்த மேல்ஜாதிக்காரனுக்கு கொம்பிருந்தா காட்டுங்கய்யா…உழைக்கிற கூட்டமெல்லாம் கீழ் சாதி மனுசங்களா…உக்காந்து திங்கிறவங்கள்லாம் மேல் சாதி வம்சங்களா? என்னங்கடா நாடு.! சாதிய தூக்கிப்போட்டு மூடு.!”
இத்தகைய வரிகளை கேட்கிறபோது அதில் இருக்கிற உண்மை தெரிகிறது. இந்த வரிகளில் எங்கும் வன்மம் இல்லை. இங்கே பாடல் வீடியோ இருக்கிறது கேட்டுப்பாருங்கள்.