திரைப்பட உலகின் முக்கியமான அமைப்புகளான தென்னிந்திய நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த இரண்டும் அரசாங்கத்தின் தனி அதிகாரிகளின் கைகளில் இருக்கிறது.
அரசாங்கத்தை எதிர்த்தால் ‘ஜனநாயக’அமைப்பில் இப்படித்தான் நடக்கும் என்பதை திரை உலகத்தினர் தெரிந்து கொள்வதற்காக கிடைத்த வாய்ப்பு என்று சொல்லலாம்.
கடந்த ஆண்டு ஜூன் 23 ம் தேதி நடந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்து தனி நீதிபதி உத்திரவு பிறப்பித்திருந்தார்.
இதை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரித்த நீதிபதி, தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து, 3 மாதத்திற்குள் புதிய தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.
மேலும் நடிகர் சங்கத்தை தனி அதிகாரி தொடர்ந்து நிர்வகிப்பார் என்றும்,விஷால் தொடர்ந்த மேல் முறையீட்டு மனு மீது வரும் ஏப்ரல் 8 ம்தேதிக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.