எழுத்து இயக்கம்;யு அன்பு. இசை;தர்மபிரகாஷ் ,ஒளிப்பதிவு :ராசாமதி ,பாடல்கள் :அறிவுமதி ,அருண் பாரதி ,உமா தேவி ,தயாரிப்பு ;டாக்டர்.பிரபு திலக் 11;11புரொடக்சன்ஸ்
சிபி சத்யராஜ் ,சமுத்திரகனி ,நட்ராஜ் சுப்பிரமணியம்,ஷிரின் காஞ்ச்வாலா ,பவா செல்லத்துரை ,ரித்விகா ,சனம் ஷெட்டி ,யாமினி சந்தர் ,
************
இயக்குநர் யு அன்பு அறிமுகப் படம். மிகவும் அரிதான பம்பாய் பிளட் குரூப் என்பதை அடிப்படையாக வைத்து பின்னப்பட்ட கதை .1952-ல் பம்பாய் டாக்டர் ஒய்.எம்.பென்டே என்பவர் கண்டு பிடித்து சொன்னதாக சொல்கிறார்கள் . இந்த அரிதான ரத்த வகையை சேர்ந்தவருக்கு வேறு வகையான குரூப் ரத்தம் செலுத்தப்பட்டால் மரித்து விடுவார் . அதுவும் பச்சை குழந்தையின் ரத்தம்தான் தேவைப்படும் .
கும்பகோணத்தில் காணாமல் போகும் குழந்தைகள் மறுநாள் சாவது கதையின் சஸ்பென்ஸ். அரிதான இந்த ரத்த வகைக் குழந்தைகள் அடிக்கடி பிறப்பதில்லை. என்றாலும் போலீசின் மூளை இதில் எதோ ஒரு வகை சதி இருப்பதாக சந்தேகிக்கிறது. என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் வால்டர் சிபிராஜ் தலைமையில் ஒரு குழு.
கண்டுபிடித்தபோது மிகப்பெரிய திமிங்கலமே மாட்டியது தெரிகிறது. ஆனால் வேட்டையாடுவதற்கு வசதியான கிரவுண்ட் இருந்தும் கோட்டை விட்டிருக்கிறார்கள். சொதப்பலான திரைக்கதை. கேரக்டர்களுக்கு சரியான உருவம் கிடைக்கவில்லை.சரியான உருவம் கிடைத்தும் அதை உருப்படியாக அமைக்கவில்லை.
உதாரணம் பவா செல்லத்துரை. சமுத்திரக்கனி.
சமூக சீர்த்திருத்தம் பேசுகிற சமுத்திரக்கனிக்கு கருப்பு சட்டை போட்டவர்கள் நெற்றியில் பட்டும்படாமல் துண்ணூறு பூசியதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? அட போங்கய்யா!அந்த கேரக்டரை கொலை செய்ததால் கதையில் ஏற்பட்ட திருப்பு முனை என்ன?
தொந்தி இருப்பதினாலேயே பவா செல்லத்துரையை மந்திரியாக்கி இருக்கிறார்கள். கம்பீரம் இல்லை.
சமுத்திரக்கனியை என்கவுண்டரில் போட்டவர்கள் அவர் வந்த காரில் தேடப்படுகிற மிகப்பெரிய குற்றவாளி நட்டி பின் சீட்டில் ஒளிந்திருந்தது தெரியாமல் போய் விட்டதா? டிக்கியில் கிடந்தார் என்றாலாவது போகிறது என்று விட்டு விடலாம்.
இடைவேளைக்கு பின்னர் நட்டி வருகிற காட்சிகள் பரவாயில்லை என சொல்கிற ரகம்.
மற்றபடி வால்டர் ஏமாற்றம்.!வலுவில்லாதவன் கையில் கதாயுதம் கொடுத்த மாதிரி இருக்கிறது.
சினிமா முரசத்தின் மார்க் 1 1/2 / 5