சூப்பர்ஸ்டார் ரஜினியின் “நான் சி.எம்.இல்லை ‘என்கிற பேச்சுக்கு பெரும்பான்மையான ரசிகர்கள் ஆதரவு அளிக்கவில்லை என்பது உண்மை.
இந்த நிலையில் இயக்குநர் இமயம் பாரதிராஜா ஸ்டைலில் சூப்பர் ஸ்டாரும் ஒரு நன்றி அறிவிப்பை அறிவித்திருக்கிறார்,
“அரசியல் மாற்றம்… ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற,சிந்திக்கின்ற வகையில் கொண்டு போய் சேர்த்த ஊடகங்களுக்கும்,பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.”
“மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தா அந்த ஆண்டவனாலேயே நாட்டை காப்பாத்த முடியாது “என்று சொன்னவர் தான் நமது சூப்பர்ஸ்டார். ஆனால் ‘அம்மா ‘ஆட்சி நடப்பதாகத்தான் சொல்கிறார்கள்.
அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம் இப்ப இல்லேன்னா எப்பவுமே இருக்காது என்பதை ரஜினி எந்த வகையில் எப்படி வற்புறுத்தினார் என்பது பாமர மக்களுக்கு தெரியவில்லை.
அரசியல் வித்தகர்களுக்கும் புரியவில்லை.என்பதே உண்மை.